ஹோம் /திருநெல்வேலி /

பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவிலில் தை மாத முதல் பிரதோஷம்

பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவிலில் தை மாத முதல் பிரதோஷம்

X
பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவில்

Palayankottai Tripurantheeswarar temple : தை மாத முதல் பிரதோஷம் நெல்லையில் பக்தர்கள் சாமி தரிசனம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

தை மாதம் வரும் முதல் பிரதோஷம் என்பதால் பாளையங்கோட்டையில் உள்ள திரிபுராந்தீசுவரா சிவன் கோயிலில் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. அதன்படி நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், சிவபெருமானுக்கு வில்வம் சாற்றியும் பக்தர்கள் வழிபட்டனர்.

பிரதோஷ பூஜையில் பச்சரிசி, வெல்லம் கலந்த நெய்வேத்தியத்தை நந்திபகவானுக்குப் படைத்து நெய் விளக்கு ஏற்றுவது மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும் என பக்தர்கள் தெரிவித்தனர். சிவபெருமானுக்கு நெய் விளக்கு ஏற்றினால் அனைத்துப் பாவங்களும் நம்மை விட்டு நீங்கும். மேலும்,கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். தடைப்பட்ட காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம். சிவபெருமானைத் தரிசித்து, நந்தி தேவன், சண்டிகேஷ்வரரையும் பக்தர்கள் வணங்கினர்.

செய்தியாளர் : சந்தனகுமார் - திருநெல்வேலி

First published:

Tags: Local News, Tirunelveli