உலக புவி தினத்தை முன்னிட்டு நெல்லை சயின்ஸ் சென்டரில் குடும்ப ரங்கோலி வரைதல் போட்டி பங்கேற்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் உலக புவி தினத்தை (World Earth Day) முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி(சனிக்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை 'பூமியின் எதிர்கால பாதுகாப்பிற்கான முதலீடு' (Invest in Earth for safer future) என்ற தலைப்பில் குடும்ப ரங்கோலி வரைதல் போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
இதில் குடும்ப உறுப்பினர்கள் 2 பேர்(ஒரு மாணவர் VII to X std மற்றும் ஒரு பெற்றோர் / தாத்தா பாட்டி) கொண்ட ஒரு குழுவாக பங்கேற்கலாம். அனுமதி இலவசம். இதற்கான முன்பதிவு அவசியம். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்களிப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
சிறந்த ரங்கோலிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். ரங்கோலி வரைதலுக்கு 5' அடிக்கு 5' அடி என்ற தரை அளவு கொடுக்கப்படும், தேவையான பிற பொருட்களை பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும். இதற்கு விருப்பம், தகுதியுடையவர்கள் 20.04.2023 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் முன்பதிவு செய்ய வேண்டும்.
முன்பதிவு / விபரங்களுக்கு 94429 94797 (whatsapp) என்ற எண்ணையோ sciencecentrenellaiednprog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறுஎன மாவட்ட அறிவியல் மைய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Rangoli, Tirunelveli