முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் ஐடிஐயில் சேர வேண்டுமா.. கால அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாள் தெரியுமா?

நெல்லையில் ஐடிஐயில் சேர வேண்டுமா.. கால அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாள் தெரியுமா?

ஐடிஐ மாணவர்கள்

ஐடிஐ மாணவர்கள்

Nellai ITI | மாணவர்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்ல இலவச பயண அட்டை சலுகை கட்டணத்தில் வழங்கப்படும்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் ஐடிஐயில் மாணவர் சேர்க்கையானது ஜூன் 20 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் தொழில் பயிற்சி மையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023 ஆம் ஆண்டிற்கான மாணவ மாணவியர் சேர்க்கைக்கு வரும் இருபதாம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஐடிஐயில் சேர விருப்பம் உள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க பேட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம், ஐடிஐ க ளில் பேட்டையில் உள்ள மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐடிஐ சேர்க்கை உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு ஐடிஐயிலும் சேர முடியும் , அதற்கான விவரங்களை இணையதள விளக்க கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவருக்கும் பாகுபாடு இன்றி மாதம் ரூபாய் 750 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தற்போதைய விதிகளின்படி பயிற்சிமடிக்கணினி மிதிவண்டி ஆண்டுக்கு இரண்டு சீருடைகள் ஒரு ஜோடி காலணி வரைபடக் கருவிகள் விலை இல்லாமல் வழங்க வாய்ப்புள்ளது.

மாணவர்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்ல இலவச பயண அட்டை சலுகை கட்டணத்தில் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு முடித்து இரண்டுஆண்டு ஐ டி ஐ தொழில் பிரிவுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் மட்டும் எழுதி 12ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். இதுபோல்எட்டாம் வகுப்பு முடித்து இரண்டு ஆண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளின் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் மட்டும் எழுதி பத்தாம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். அரசு ஐடிஐயில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய மாநில அரசு பணி முன்னணி அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில்அதிக வேலை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: ITI, Nellai