முகப்பு /திருநெல்வேலி /

பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் குறித்து விளக்கம்- உற்சாகமாக கற்றுக்கொண்ட திருநெல்வேலி மாணவர்கள்

பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் குறித்து விளக்கம்- உற்சாகமாக கற்றுக்கொண்ட திருநெல்வேலி மாணவர்கள்

X
பாடம்

பாடம் கற்கும் மாணவர்கள்

Tirunelveli News | திருநெல்வேலியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

கர்நாடகா மாநிலம் பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்ட அசோகா சுற்றுசூழல் ஆராய்ச்சி மையம், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வன உயிரினம், நீர் வாழ் உயிரினம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறில் இதன் கிளை அலுவலகம் உள்ளது.

இதில் பணி புரியும் அந்தோணி என்பவர் வைல்ட் லைஃப் பயாலஜி பி.எட் முடித்து தனியார் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வந்துள்ளார்.

நான்கு வருடம் பணி செய்த அவர் அசோகா சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருகிறார். அசோகா ஆராய்ச்சி மையம் மூலம் இவர் கடந்த சில வருடங்களாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வன உயிரினம் குறித்து விளக்கி வருகிறார்.

பாடம் கற்கும் மாணவர்கள்

இந்த ஆண்டு அரசு உதவி பெறும் ஸ்ரீ பரம கல்யாணி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன் புறத்தில் வைத்து பாசன குளத்தில் வாழும் பறவைகள், பூச்சிகள் குறித்து அவர் விளக்கிக் கூறினார்.

நீர் மாசு குறித்த ஆய்வில் மாணவி

இதுகுறித்து பேசிய அவர், ‘இந்தக் குளத்தில் நிறைய உயிரினங்கள் வாழ்கின்றன. உணவு தேடி வெளிநாடுகளில் இருந்தும் கூட பறவைகள் இங்கு வருகின்றன. சில தங்குகின்றன. பல தங்களின் நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றன என தெரிவித்தார்.

பாடம் கற்கும் மாணவர்கள்

மேலும் இந்த குளத்தில் வாழ்கின்ற பூச்சிகளின் வகைகள், தண்ணீரின் வெப்பநிலை, தண்ணீரில் இருக்கும் மாசு உள்ளிட்டவை குறித்து கருவிகள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள செம்மணல்கள் குறித்தும் அய்யனார் கோவில் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

கார்ல் மார்க்ஸ் பற்றி அவதூறு.. ஆளுநரை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்!

இந்த நிகழ்வில் 25 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு இந்த பள்ளி மாணவர்களை மாஞ்சோலை, களக்காடு, தலையணை, கடனா நதி உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலப்பரப்புகள் குறித்து விளக்கியுள்ளனர்.

First published:

Tags: Local News, Tirunelveli