முகப்பு /திருநெல்வேலி /

முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - நெல்லை ஆட்சியர் அறிவிப்பு!

முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - நெல்லை ஆட்சியர் அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Ex-Athletes | முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “விளையாட்டு துறையில் சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 வழங்கும் திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டி இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச தேசிய அளவிலான போட்டி உள்ளிட்ட போட்டியில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

சர்வதேச தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் 2வது இடம் 3வது இடம் பிடித்திருக்க வேண்டும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவராகவும் தமிழ்நாடு சார்பில் நடந்த போட்டியிகளிலும் பங்கேற்று இருக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாத வருமானம் ரூபாய் 6000 முதல் ரூபாய் 15 ஆயிரத்திற்கு இருக்க வேண்டும். முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in மட்டுமே தங்களது சுயவிவரம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க முடியும் விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tirunelveli