முகப்பு /திருநெல்வேலி /

திருநெல்வேலியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை!

திருநெல்வேலியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை!

மாதிரி படம்

மாதிரி படம்

Employment Guidance Adhi Dravida Students In Nellai | திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை நடக்கிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிட மாணவமாணவியர்களுக்குதொழில் மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டு ஆலோசனைகள் வழங்க fx பொறியியல் கல்லூரியில் ஏப்ரல் 22 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2023 2024ம் கல்வியாண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிக உள்ள படிப்புகள் குறித்து தன்னார்வ இயக்கத்தால் தொழில் வழிகாட்டு ஆலோசனை வழங்குதல் நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதுகுறித்து சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குனர் கடிதம் படி அனைத்து ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மற்றும் விடுதிகளில் தங்கிப் பயிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டு ஆலோசனைகள் வழங்க திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பொறியல் கல்லூரியில் ஏப்ரல் 22 மற்றும் 29 ஆகிய 2 நாட்கள் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் ஆதிதிராவிட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்”  என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    First published:

    Tags: Local News, Tirunelveli