திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வேனில் காலத் தமிழ் கலைத் திருவிழாவில் தமிழும் கலையும் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சு போட்டியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேசினர்.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், கற்பக விருட்சம் நற்பணி மன்றம் இணைந்து இந்த கோடை விடுமுறையில், மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் 15.05.2023 முதல் 21.05.2023 வரைதினசரி மாலை 03.30 மணி முதல் 05.30 மணி வரை வேனில் தமிழ் கலைத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நெஞ்சில் நிலைத்த தமிழும் கலையும் என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் இன்றைய சூழலில் தமிழனின் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியது யாது என்ற தலைப்பில் விவாத அரங்கமும் நடைபெற்றது. பேச்சுப்போட்டியில் அண்ணாமலை, கதிர், பானுரேகா, கோவர்த்தினி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது பானுரேகா பேசியதாவது, “அருண்மொழி வர்மன் என்ற ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் தமிழ் மொழிக்கு உதாரணம். தமிழில் மெய்எழுத்துக்கள் 18 தஞ்சையில் உள்ள லிங்கத்தின் பீடம் 18 அடி உயரமாகும். உயிரெழுத்துக்கள் 12, அங்குள்ள லிங்கத்தின் உயரம் 12 அடியாகும். தமிழில் உயிர்மெய் எழுத்துக்கள் 216, தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடியாகும். தமிழில் மொத்த எழுத்துக்கள் 247, தஞ்சை பெரிய கோயிலில் நந்திக்கும் லிங்கத்திற்கும் இடையே உள்ள தூரம் 247 அடியாகும்” என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் தமிழம் கலையும் ஒன்று அதை வளர்ப்பது நன்று என தெரிவித்தார். இவரைப்போல் அண்ணாமலை, கதிர், கோவர்த்தினி ஆகியோரும் தமிழும் கலையும் பற்றி அருமையாக பேசினர். பேச்சுப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் அருங்காட்சியகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli