குழாய் வழியாக பயிர்களுக்கு தேவையான நீரை மழைச்சாரல் போல் துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பிலோ அல்லது பயிர்களின் வேர்ப்பகுதியிலோ நேரடியாக நீர் வழங்கும் அமைப்புதான் சொட்டு நீர் பாசன முறையாகும். இந்த சொட்டுநீர் பாசன முறை பயிர்களுக்கு தேவையான நீர், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்கு தேவைப்படும் பொருட்களை பயிர்களின் வேர்ப்பகுதியில் நேராக அளிக்கிறது. சாகுபடி நிலம் குறைந்து வந்தாலும் உற்பத்தி திறனை அதிகரித்து தரமான உணவு, விளைச்சல் பொருட்களை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே குறைந்த நீரை கொண்டு நிலையான வருமானத்தை பெற வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
இவற்றை கருத்தில் கொண்டு இந்த சொட்டுநீர் பாசன முறை திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. சொட்டுநீர் பாசனத்தின் சான்ட் ஃபில்டர் செயல்பாடு குறித்து திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஷேக் அப்துல்லா விளக்கம் அளித்தார். இதுகுறித்து பேசிய அவர், “கிணற்றில் உள்ளே நீர் மூழ்கி மோட்டார் உள்ளது. அதனை இயக்கும்போது அதிலிருந்து மேல் எழும்பும் தண்ணீரானது non return வால்வுக்கு வருகிறது. இந்த வால்வு தண்ணீரை மீண்டும் கிணற்றுக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்கிறது. சான்ட் ஃபில்டர் எனப்படும் மணல் வடிகட்டியானது கிணற்றிலிருந்து வரும் தண்ணீரில் பாசி போன்றவை இருந்தாலும் மாசடைந்து இருந்தாலும் அதனை ஃபில்டர் செய்கிறது.
இந்த பில்டர் உள்ளே மணல் நிரப்பப்பட்டுள்ளது. அதிலிருந்து கீழே இறங்கும் தண்ணீரானது பில்டர் செய்யப்பட்டு அவுட்லெட்டுக்கு வருகிறது. அவுட்லெட்டில் இருந்து வெளியே செல்லும் தண்ணீரின் பிரஷரை சரி பார்த்துக்கொள்ளலாம். இங்கிருந்து வெளியேறும் நீரானது நிலத்தில் பதியப்பட்டுள்ள குழாய் மூலம் பாசனத்திற்கு செல்கிறது” என்று தெரிவித்தார்.
செய்தியாளர் : சந்தனகுமார் - திருநெல்வேலி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Tirunelveli