ஓலைச்சுவடிகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
கல்வெட்டுகளை விட ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது மிகவும் கடினம். 200, 300 ஆண்டுகளுக்கு முன்பு ஓலைகளில் எழுதப்பட்ட மருத்துவம், இலக்கியம், ஜாதகம் சார்ந்த விஷயங்களை பாதுகாத்து வருகின்றனர் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சுவடியியல் பாதுகாப்பு குழுமம். இந்த குழுமத்தின் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் பொன் வேலப்பன் மற்றும் ஓலைச்சுவடிகளை பாதுகாத்தல், டிஜிட்டல் மின் உருவாக்கம் செய்யும் ஆர்.கணேசன் ஆகியோர் இப்பணிகளை செய்து வருகின்றனர்.
ஓலைச்சுவடிகளில் பூச்சி அரித்தல் என்பது அதிகமாக இருக்கும். இதனை தவிர்க்க இவர்கள் லெமன் கிராஸ் ஆயிலை ஓலைச்சுவடிகளில் தடவி பூச்சி அரிக்காத வண்ணம் பராமரித்து வருகின்றனர். சிலரிடம் ஓலைச்சுவடிகள் இருக்கலாம். அவர்கள் அதனை பயன்படுத்த தெரியாமல் சாதாரணமாக வைத்து இருப்பார்கள். அந்த ஓலைச்சுவடிகளை இவர்களிடம் கொடுத்தால் அதில் ஓட்டை கிழிசல் என எவ்வளவு பழையதாக இருந்தாலும் ஓலைச்சுவடியில் உள்ள விஷயங்களை புதுப்பித்து தருகின்றனர்.
முக்கியமான ஓலைச்சுவடியாக இருந்தால் அதனை புத்தகமாக்கவும் அதன் உரிமையாளர்களுக்கு பரிந்துரைக்கின்றனர். இவ்வாறு கொடுக்கப்படும் ஓலைச்சுவடிகளின் ஒரு காப்பியை டிஜிட்டல் முறை தொழில்நுட்பத்தில் இக்குழுவினரும் வைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஒருவேளை அந்த முக்கியமான ஓலைச்சுவடி அதன் உரிமையாளரிடம் இருந்து தொலைந்தால் கூட அரசிடம் பத்திரமாக இருக்கும் என்ற காரணத்தினால் மட்டுமே. இதனை இக்குழுவினர் இலவசமாக செய்து கொடுக்கின்றனர்.
ஒருவேளை உங்களிடமும் ஓலைச்சுவடிகள் இருந்தால் இக்குழுவினரை அழைத்து பேச 8925388781, 9751689728 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து பேசிய பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி இணை பேராசிரியர் சுபாஷ் சந்திரன் கூறுகையில், “நான் சேகரித்த மருத்துவம், ஜோதிடம், கால்நடை மருத்துவம், மாந்திரீகம் போன்ற பல வகை கூறுகள் அடங்கியவை இந்த குழுவிடம் வழங்கப்பட்டுள்ளன. இதனை இக்குழுவினர் டிஜிட்டல் மயமாக்க உள்ளனர். பின்னர் அதனை இ-புக்காகவும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதேபோல் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஓலைச்சுவடிகளை சேகரித்தல், பாதுகாத்தல், படியெடுத்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கிறோம்” என தெரிவித்தார். இவ்வாறு செய்தால் சித்த மருத்துவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தர மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தா மரியா தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli