முகப்பு /செய்தி /திருநெல்வேலி / திமுக மாவட்டச் செயலாளர் அதிரடியாக நீக்கப்பட்டது ஏன்..? பரபரப்பு தகவல்கள்...!

திமுக மாவட்டச் செயலாளர் அதிரடியாக நீக்கப்பட்டது ஏன்..? பரபரப்பு தகவல்கள்...!

அப்துல் வஹாப் - மைதீன்கான்

அப்துல் வஹாப் - மைதீன்கான்

முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன் கான் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

சொந்த கட்சியினருக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பாளையங்கோட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ அப்துல் வஹாப்பின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கியதால், தொடர் சலசலப்பு நீடித்து வந்தது. இவர்களுக்கு பின்புலமாக அப்துல் வஹாப் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

மாநகராட்சியின் ஒவ்வொரு கூட்டத்தின் போதும், திமுகவை சேர்ந்த மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே முழக்கமிடுவது, தர்ணா போராட்டம் நடத்துவது போன்ற நிகழ்வுகள் அரங்கேறின. மேயரை மாற்றக்கோரி அப்துல் வஹாப் ஆதரவு கவுன்சிலர்கள் அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து முறையிட்டனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திருநெல்வேலி சென்ற போது, அவருக்கு முன்பாகவே எம்.எல்.ஏவான அப்துல் வஹாப் தரப்ப்பினரும், மற்றொரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அப்துல் வஹாப் விடுவிக்கப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன் கான் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாகவும் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க; ரூ.20 லட்சம் இழப்பீடு வேண்டும்- கள்ளச் சந்தையில் மதுபானம் குடித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டம்

top videos

    இதனிடையே, மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த மிசா பாண்டியன் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக துரைமுருகன் அறித்துள்ளார். மிசா பாண்டியன் மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயராக இருந்தது குறிப்பிட்டத்தக்கது.

    First published:

    Tags: DMK, Tirunelveli