முகப்பு /திருநெல்வேலி /

வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டுமா? நெல்லை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவுரை!

வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டுமா? நெல்லை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவுரை!

X
மாதிரி

மாதிரி படம்

Nellai News : திருநெல்வேலியில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு  உத்தரவுக்கு இணங்க தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி உட்பட 10 தாலுகாக்களில் சட்டப்பணிகள் ஆணை குழுக்களால் மொத்தம் 25 அமர்வுகளுடன் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுக்கு இணங்க தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் முதன்மை மாவட்ட நீதிபதியும் திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவின் தலைவர் சீனிவாசன் தலைமையிலும் மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 3வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், 4வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி குமரேசன், மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மனோஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்த வேலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராம், திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவில் செயலாளரும் சார்பு நீதிபதியும் ஆகிய இசக்கியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நெல்லையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம்

மேலும் முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தானம், 2வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வள்ளியம்மாள், நீதித்துறை நடுவர்கள் திருவேணி, ஆறுமுகம், விஜயராஜ் குமார், பாக்கியராஜ், கவிப்பிரியா, அருண்குமார் மற்றும் முரளி நாதன், திருநெல்வேலி வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் காமராஜ், வழக்கறிஞர்கள் பொதுமக்கள் ஆகிய கலந்து கொண்டனர்.

மேலும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் உட்பட மொத்தம் 4 ஆயிரத்து 28 வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத தாவாக்களாகிய வங்கி கடன் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.இவற்றிற்கு விரைவில் தீர்வு காணப்பட உள்ளன என முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    2023ம் ஆண்டு மே மாதம் 2வது சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் முதல் தாலுக்கா நீதிமன்றங்கள் வரை நடத்த தேசிய சட்டப் பணிகள் ஆணைய குழுஉத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Local News, Tirunelveli