முகப்பு /திருநெல்வேலி /

மனிதன் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி? விளக்கும் சைவ சபை!

மனிதன் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி? விளக்கும் சைவ சபை!

X
சொற்பொழிவு

சொற்பொழிவு

Nellai sabai | திருநெல்வேலியில் 1886 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சைவ சபையில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அஞ்செழுத்தின் புணை என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli | Tirunelveli

நெல்லை சைவ சபையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

திருநெல்வேலி சைவ சபையில் அஞ்செழுத்தின் புணை என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது.

திருநெல்வேலியில் 1886 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சைவ சபையில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அஞ்செழுத்தின் புணை என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது. இறை வணக்கத்தை சைவ சபையின் செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் வழங்கினார். இதற்கு சைவ சபையின் தலைவர் புலியூர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சைவசபையில் துணைத்தலைவர் காந்தி வரவேற்புரை ஆற்றினார்.

பேராசிரியர் முருகலிங்கம் சிறப்பு சொற்பொழிவாற்றினார். அப்போது அவர், அஞ்செழுத்தின் புணை என்ற தலைப்பில் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார். அதன் சுருக்கத்தை தற்போது பார்க்கலாம். மனிதர்கள் பல்வேறு துன்பங்களை வாழ்க்கையில் அடைகிறார்கள். இந்த துன்பங்கள் எல்லாம் எப்போது நீங்கும் என்ற கேள்வியை கேட்கிறார்கள்.

அதற்கு நாம் இந்த பிறவியில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்கிறோம். மரணம் இல்லா பெருவாழ்வு, இறைவனை அடைவது. அதற்கு மூன்று விஷயங்கள் உள்ளன. ஒன்று திருநீறு, இரண்டாவது ஐந்து எழுத்து மந்திரம், மூன்றாவது இறைவனை சிந்திக்க வேண்டும் என்றார். நன்றி உரையை முத்துவேல்விழி ஆற்றினார் . இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சைவ சிவஞான பெரும்பணி செய்து வரும் பாளையங்கோட்டை சைவ சபையை பாராட்டி திருவாடுதுறை 23 வது ஆதீனம் சித்தாந்த சுடர் நிலையம் எனும் சிறப்பு விருந்தினை வழங்கி வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Nellai, Tirunelveli