நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் கண்டறிதல் முகாம்கள் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பார்வையில் காணும் கடிதப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் கண்டறிதல் முகாம்கள் 02.05.2023 அன்று கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி வள்ளியூரிலும், 03.05.2023 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சேரன் மகாதேவி மற்றும் 04.05.2023 அன்று பிஷப்சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, ஊசிகோபுரம் எதிரில் பாளையங்கோட்டையில் வைத்து நடைபெற உள்ளது.
இதையும் படிங்க | நெல்லையில் புதுமைப்பித்தனின் 118வது பிறந்த நாள் கொண்டாட்டம்!
இம்முகாமில் மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், காதொலி கருவி, ஊன்று கோல், ரோலேட்டர், ஒளிரும் மடக்கு குச்சி, பட்ட படிப்பு பயிலும் பார்வையற்ற மாணாக்கர்களுக்கு டேப்லட் மற்றும் பிரெய்லி கேன், மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு கற்றல் உபகரணங்கள், செயற்கை கால் மற்றும் கை, காலிப்பர்கள், , வாக்கர், ஸ்பிலின்ட், கெயிட்டர் போன்ற உபகரணங்கள் தேவைப்படுவோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை, அசல் மற்றும் நகல், UDID அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை, அசல் மற்றும் நகல் புகைப்படம் வருமானகச்சான்று ஆகியவற்றுடன் மேற்காணும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nellai, Tirunelveli