திருநெல்வேலி, அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் விதமாக பல்வேறு போட்டிகளும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன .
அவற்றுள் ஒன்றாக பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பொருநை நடனப் போட்டி (பரதநாட்டியம் & கிராமிய நடனம் போட்டிகள்) வரும் ஞாயிற்றுக்கிழமை (09-04-2023) அன்று மாலை 4 மணிக்கு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் நாட்டியம், மற்றும் கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை) போன்ற நடனங்களும் ஆடலாம்,முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதி இல்லை. தமிழ் பாடல்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இப்போட்டியில் அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரை மட்டுமே நடனமாட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெல்லை மாவட்டத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய கலை நடனங்கள் ஆடலாம். இப்போட்டி ஐந்து வயது முதல் 10 வயது வரை ஒரு பிரிவாகவும் 11 வயது முதல் 15 வயது வரை இரண்டாம் பிரிவாகவும் 16 வயது முதல் 20 வயது வரை மூன்றாவது பிரிவாகவும் நடைபெறும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஒவ்வொரு பிரிவுகளில் இருந்து சிறந்த மூன்று நபர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஏப்ரல் 7ஆம்தேதி மாலை 5 மணிக்குள் 9047817614 என்கிற வாட்ஸ் அப் எண்ணில் தங்களது பெயர்களை கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளிதெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thirunelveli