முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை..!

நெல்லை மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை..!

X
நெல்லை

நெல்லை மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி

Tirunelveli Corporation Girls Higher Secondary School : நெல்லை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் +2 தேர்வு தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த +2 தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் 96. 61% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதன்படி மொத்தம் 19,722 பேர் தேர்வு எழுதிய நிலையில் 19,053 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள் 9,017 பேர் தேர்வெழுதிய நிலையில் 8,576 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர. பெண்கள் 10,705 பேர் தேர்வு எழுதிய நிலையில் 10,477 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மாணவர்கள் அடுத்த கட்டமாக உயர் கல்வி படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பள்ளியில் படித்த தமிழரசி என்ற மாணவி 559 மதிப்பெண்களும், பவித்ரா என்ற மாணவி 554 மதிப்பெண்களும், சௌந்தர்யா என்ற மாணவி 544 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மேபெல் ராணி கூறுகையில், “மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது மகிழ்ச்சி இதற்கு மாணவிகளின் விடாமுயற்சி ஆசிரியர்களின் கடின உழைப்பு காரணம்" என தெரிவித்தார்.

    First published:

    Tags: Local News, Tirunelveli