முகப்பு /திருநெல்வேலி /

பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்ய கண்டெய்னர் மாடல் கடை.. திறந்து வைத்து ரூசி பார்த்த திருநெல்வேலி ஆட்சியர்..

பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்ய கண்டெய்னர் மாடல் கடை.. திறந்து வைத்து ரூசி பார்த்த திருநெல்வேலி ஆட்சியர்..

X
கண்டெய்னர்

கண்டெய்னர் மாடல் கடை

Organic Food : திருநெல்வேலியில் கண்டெய்னர் மாடல் கடையில் பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி ராதாபுரத்தில் பனை ஓலை பொருட்கள், அம்பாசமுத்திரத்தில் குத்துவிளக்கு, காரக்குறிச்சியில் மண்பாண்ட பொருட்கள், கல்லிடைக்குறிச்சியில் அப்பளம், வீரவநல்லூரில் கைத்தறி சேலைகள் என பல்வேறு கைவினை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுப்புது இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட இந்த பொருட்களை இன்றுவரை கைவினை தொழிலாளர்கள் பாரம்பரிய முறைப்படி தயாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்ட நிர்வாகம் முயற்சியால் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மகளிர் திட்ட வளாகத்தில், நெல்லை கிராப்ட்ஸ் என்ற விற்பனைக்கூடம் தொடங்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக மேடை காவல் நிலையம் அருகே கண்டெய்னரில் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் கடை அமைக்கப்பட்டது. தற்போது அதன் அருகே பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி பாரம்பரிய உணவுகளை கண்டெய்னரில் வைத்து கடை போல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கம்பு லட்டு, வாழைப்பூ வடை, சுசியம், உளுந்தங்கஞ்சி, கொண்டைக்கடலை, இனிப்பு பனியாரம், காரப் பனியாரம், கிழங்கு, போண்டா, பருத்திப்பால் ஆகியவை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. பாரம்பரிய உணவுகள் வைக்கப்பட்டுள்ள இந்த கண்டெய்னரை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மேயர் சரவணன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து அவர்கள் பாரம்பரிய உணவுகளை ருசித்து பார்த்தனர். இந்த கடைக்கு தற்போது ஏராளமானோர் வரத்தொடங்கியுள்ளனர்.

செய்தியாளர் : சந்தனகுமார் - திருநெல்வேலி

First published:

Tags: Local News, Tirunelveli