முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

Manonmaniyam Sundaranar University in Nellai | திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்புகளுக்காகன கலந்தாய்வு இம்மாதம் நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்புகளுக்காகன கலந்தாய்வு இம்மாதம் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அண்ணாதுரைசெய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இப்பல்கலைக்கழகத் துறைகளில் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டயப்படிப்பு மற்றும் இளநிலைபாடப்பிரிவுகளில் பயில்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு இம்மாதம் 24ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

காலை 10.30 மணியளவில் கலந்தாய்வு தொடங்கும். அறிவியல் பாடப்பிரிவுகளான இயற்பியல், வேதியியல், கணிதம், உயிர்தொழில் நுட்பவியல், சுற்றுச்சூழல் அறிவியல், கடல்சார் அறிவியல் ஆகிய பாடப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான bsc antificial intelligence and machine learning, bsc cyber securiry. Bsc data science கலந்தாய்வு வஉசி அரங்கத்தில் நடைபெறும்.

இதையும் படிங்க : என்னது இந்த நதி கண்ணுக்கு தெரியாதா? - அதுவும் நம்ம ஈரோட்டில் உள்ளதா..!

வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு சுந்தரனார் அரங்கத்தில் நடைபெறும். வரலாற்று துறையிலும், பட்டயப்படிப்பில் மருந்தாக்கவியல் பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு மருந்தாக்கவியல் துறையிலும் நடைபெறும். கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகல் ஒன்றை கையில் வைத்திருக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தேர்வு பெறும் மாணவர்கள் கல்விக் கட்டணத்தை அங்கேயே வங்கி கவுண்டரில் செலுத்திக் கொள்ளலாம். மேலும், விடுதி வசதி தேவைப்படும் மாணவர்களும்  விடுதி கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விவரங்கள் அந்தந்த துறைத் தலைவர்கள் மின்னஞ்சல் மூலமாமகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ தெரிவிப்பார்கள். மற்ற விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ அல்லது www.msuniv.ac.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Tirunelveli