முகப்பு /செய்தி /திருநெல்வேலி / தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு - ஆற்றில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு - ஆற்றில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

தாமிரபரணியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்

தாமிரபரணியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்

நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஆலைக் கழிவுகள் கலக்கப்படுவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆற்றில் இறங்கி தர்ணாவில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாய தேவையை பூர்த்தி செய்வதோடு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தனியார் ஆலை கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் கலக்கப்படுவதால், தாமிரபரணி ஆறு சென்னை கூவம் ஆறு போல மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தி வெளியிட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் காங்கிரசார் கழிவுநீர் கால்வாய் மேல் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுத்து நிறுத்த உறுதிமொழி அளித்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் எனக் கூறி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனை அடுத்து காவல்துறை உதவி ஆணையர் தலைமையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த அதிகாரம் உள்ள அதிகாரி நேரில் வந்து கலப்பதை தடுத்து நிறுத்தப்படும் என உறுதிமொழி அளித்தால் போராட்டத்தை கைவிடுவதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, மாநகராட்சி ஆணையாளரின் நேர்முக உதவியாளர் கழிவுநீர் கலப்பது தடுத்து நிறுத்தப்படும் என உறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.

top videos

    செய்தியாளர் : ஐயப்பன் (திருநெல்வேலி)

    First published:

    Tags: Tirunelveli