திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சிறுதானியம் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி ஆட்சியர் கோகுல், அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி சார்பில் மாணவ, மாணவிகள் சிறுதானியங்கள் குறித்து தெரிந்து கொள்ள அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து பேசிய பேராசிரியர்கள், ‘குதிரைவாலி, கேழ்வரகு, திணை வரகு ஆகிய சிறு தானியங்களை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது பற்றி இன்று பரவலாக பேசப்பட்டு வந்தாலும், பலருக்கும் இப்போதும்கூட சிறுதானியங்கள் குறித்த முழுமையான விவரங்களும், அவை தரும் நன்மைகளும் தெரியவில்லை.
நம் முன்னோர்களால் அந்த காலத்தில் இருந்தே சாப்பிடப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தை பிடிப்பது சிறுதானியங்கள் தான். ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனித இனம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் முக்கிய இடம் வகிக்கிறது.
சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறைகளின் ராஜாவாக கருதப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் அரிசி சிறுதானியங்களின் வழிமரபு தான். சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும், குறைவான நீர் வசதியிலும் மற்றும் சாதாரண மண் வளத்திலும் நன்கு செழித்து வளரும். சிறுதானியங்களை நாம் உணவாக எடுத்துகொள்ளும் போது நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
நெல்லையிலும் கலைஞர் நூலகம்? - சபாநாயகர் அப்பாவு சொன்ன சேதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli