முகப்பு /திருநெல்வேலி /

கொளுத்தும் வெயிலை சமாளிக்க குளிர்ச்சி தரும் இளநீர்.. நெல்லையில் களைகட்டும் விற்பனை..

கொளுத்தும் வெயிலை சமாளிக்க குளிர்ச்சி தரும் இளநீர்.. நெல்லையில் களைகட்டும் விற்பனை..

X
கொளுத்தும்

கொளுத்தும் வெயிலை சமாளிக்க குளிச்சி தரும் இளநீர்

Tirunelveli News | கோடை வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இளநீர் விற்பனை களைகட்டி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் சில தினங்களாக இரவு நேரங்களில் லேசான குளிர் இருந்து வந்தாலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் சில தினங்களாக பகல் நேரங்களில் வாட்டி வரும் வெயிலில் இருந்து உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள கோடைக்கு இதம் தரும் வகையில் குளிர்ச்சியை தரும் இளநீர் கடைகளை பொதுமக்கள் நாடி வருகின்றனர்.

இதனால், நெல்லை சுற்று வட்டார பகுதிகளில் இளநீர் விற்பனை களைகட்டி வருகிறது. இதுகுறித்து இளநீர் வியாபாரி மீனா கூறுகையில், “முருகன் குறிச்சியில் இளநீர் கடை வைத்துள்ளேன். தேவர் குளத்திலிருந்து இளநீர் இங்கே வருகிறது. ஒரு இளநீர் 30 ரூபாய்க்கு வியாபாரம் செய்கிறேன். 22 ரூபாய்க்கு எங்களுக்கு கிடைக்கிறது. லாரி வாடகை உள்ளிட்டவை இருப்பதால் 30 ரூபாய்க்கு வியாபாரம் செய்கிறோம்.

இளநீர் பருகுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இளநீர் குடிப்பதால் நம் உடலுக்கு அதிக குளிச்சி கிடைக்கிறது. இயற்கையாக கிடைக்கும் இளநீர் உள்ளிட்டவற்றிற்கு மக்கள் ஆதரவு தரவேண்டும். குறிப்பாக சாலையோர வியாபாரிகளுக்கு பொதுமக்கள் தங்களின் ஆதரவை கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

First published:

Tags: Local News, Tirunelveli