முகப்பு /திருநெல்வேலி /

தேங்காய் பூ சாப்படிருக்கீங்களா... நெல்லையில் பரபரக்கும் விற்பனை

தேங்காய் பூ சாப்படிருக்கீங்களா... நெல்லையில் பரபரக்கும் விற்பனை

X
தேங்காய்

தேங்காய் பூ

Tirunelveli | முற்றிய தேங்காயிலிருந்து விளையக்கூடிய தேங்காய் பூவை மக்கள் விரும்பி உண்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் தேங்காய் பூ விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.

திருநெல்வேலியில் இளநீர், முற்றிய தேங்காய் நீர், தேங்காய் பால், தேங்காய் துண்டுகள், தேங்காய் எண்ணெய் ஆகியவை தேங்காயிலிருந்து கிடைக்கும். ஒவ்வொரு பொருட்களிலும் வெவ்வேறு வகையான சுவைகள் உள்ளன. அதேபோல், மருத்துவ குணங்களும் உள்ளன. தேங்காயை முளைகட்ட வைத்தால் அதற்குள்ளே முளைக்கும் தேங்காய் பூவிலும் ஏராளமான மருத்துவ பயன்கள் இருப்பதாக தெரிகிறது.

முற்றிய தேங்காயிலிருந்து வரக்கூடிய கருவளர்ச்சி தான் தேங்காய் பூ என்று சொல்லப்படுகிறது. இந்த தேங்காய் பூ, தேங்காயின் முழு உள்பரப்பும் நிறைந்து உருண்டை வடிவத்தில் வெண்மையாக சிறிது இனிப்பு சுவையுடன் இருக்கும். இந்த தேங்காய் பூ 3 மாத பயிராக விளைவிக்கப்படுகிறது.

தேங்காய் பூ

3 மாதங்களுக்கு பின் அவற்றை தோண்டி எடுக்காவிட்டால், பூ முற்றி மரமாக வளர தொடங்கி விடும். 1 தேங்காய் பூ 120 முதல் 200 கிராம் வரை இருக்கிறது. இந்த தேங்காய் பூ விற்பனை ஜங்ஷன், டவுன், பாளையங்கோட்டை, பெருமாள்புரம் உள்ளிட்ட இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேங்காய் பூவை, பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து பேசிய வியாபாரி வெங்கடேஷ், ‘நெல்லை பகுதியில் விளைவிக்கப்படும் தேங்காய் பூக்களை மாவட்டத்திலுள்ள மைய பகுதியில் விற்பனை செய்து வருகிறோம். இனிப்பு சுவையாக, பஞ்சு போல் இருக்கும். இந்த தேங்காய் பூவை உண்பதால் வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாகிறது. இளநீரை விட கூடுதல் விலை என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும்.

அதுமட்டுமின்றி குடல் நோய், கோடை வறட்சி, அல்சர், சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாக்கும். மருத்துவகுணம் இருப்பதால் தேங்காய் பூவை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்த தேங்காய் பூவை ரூ.70-க்கு விற்பனை செய்து வருகிறோம். விற்பனை மும்முரமாக நடப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

First published:

Tags: Local News, Tirunelveli