முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை புத்தக திருவிழாவில் பாரம்பரிய பொருட்கள்.. மண்பாண்ட பொருட்களை வடிவமைத்து அசத்திய தொழிலாளி..

நெல்லை புத்தக திருவிழாவில் பாரம்பரிய பொருட்கள்.. மண்பாண்ட பொருட்களை வடிவமைத்து அசத்திய தொழிலாளி..

X
நெல்லை

நெல்லை புத்தக திருவிழாவில் பாரம்பரிய பொருட்கள்

Tirunelveli district | திருநெல்வேலி புத்தக திருவிழாவில் பாரம்பரிய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தொழிலாளி ஒருவர் மண்பாண்ட பொருட்களை வடிவமைத்து அசத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி புத்தக திருவிழாவில் களிமண் பொருட்களை வடிவமைத்து அசத்தினார் ஒரு தொழிலாளி. அவர், பொதுமக்கள் பாரம்பரியமான மண்பானைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முற்காலத்தில் விவசாய விளைபொருட்களை சேகரித்து வைக்கவும், சமையல் போன்றவற்றிற்கும் மண் பாண்டங்களே பயன்படுத்தப்பட்டன. இத்தகைய பொருட்கள் களிமண்ணால் செய்யப்பட்டு வந்தன. இன்று மண் பானை பயன்பாடு மிகவும் குறைந்துவிட்டது. அதேபோன்று ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இடம் பெற்றிருந்த அம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் போன்றவற்றின் பயன்பாடு குறைந்துவிட்டாதால் அவையும் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை.

இந்நிலையில், தமிழர்களின் கலாச்சாரத்தை நினைவு கூறும் வகையில் பொருநை நெல்லை புத்தக திருவிழாவில் களிமண்ணால் ஆன பொருட்களை தயாரிக்கும் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய பானைகள், உண்டியல் போன்றவற்றை அங்கே தயார் செய்து அசத்தினார் மண்பாண்ட தொழிலாளி.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது பெயர் இசக்கிவேல். காருக்குறிச்சியை சேர்ந்தவன். தாத்தா காலத்தில் இருந்தே மண்பாண்ட பொருட்களை செய்து வருகிறது எங்கள் குடும்பம். குளத்தில் ஒன்று அல்லது ஒன்றரை அடியில் இருக்கும் களிமண்ணை எடுத்து மண்பாண்டங்கள் செய்கிறோம்.

இதையும் படிங்க : நெல்லையில் இப்படி ஒரு இடமா? அதிகம் அறியப்படாத குத்திரபாஞ்சான் அருவி குடும்பத்துடன் குளித்து மகிழ செம ஸ்பாட்..

மண்பாண்டங்கள் செய்யும்போது எந்த தண்ணீரை வைத்து வேண்டுமானாலும் பொருட்களை தயார் செய்யலாம். இதற்கான மிஷின் கோயம்புத்தூரில் இருந்து வர வைக்கப்படுகிறது. நாங்கள் சட்டி, பானை, தொட்டி, உண்டியல் போன்ற மண்பாண்ட பொருட்களை தயார் செய்து வருகிறோம்.

தேவைக்கேற்ப சிறிய பொருட்களாகவும் பெரிய பொருட்களாகவும் செய்து வருகிறோம். அவற்றின் அளவைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. பொதுமக்கள் பாரம்பரியமான மண்பானைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

First published:

Tags: Local News, Tirunelveli