நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக புத்தகதின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ‘என்னை ஈர்த்த புத்தகம்’என்கிற தலைப்பில் சிறப்பு போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியினை நெல்லை மாவட்ட காப்பாட்சியர்சிவ.சத்தியவள்ளி துவங்கி வைத்தார். முன்னதாக நிகழ்வில் வந்திருந்த அனைவரையும் எழுத்தாளர் நாறும்பூ நாதன் வரவேற்றார். இப்போட்டியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 60க்கும் மேற்பட்டோர் தங்களது பெற்றோர்களுடன் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களை ஈர்த்த புத்தகம் பற்றி பேசினார்கள்.
போட்டிக்கு கலை ஆசிரியை சொர்ணம், முனைவர் கணபதி சுப்ரமணியம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை பிரியதர்ஷினி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
நிகழ்வில் திருநெல்வேலி மாநகர சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் ராஜ சுரேஷ், சந்திரமோகன், பிரியதர்ஷினி, முத்துக்கிருஷ்ணன், மூவெ ரா, தேவபிரான், ஆனந்தி முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அருள்செல்வி வழங்கினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Book reading, Local News, Nellai, Tirunelveli