முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் தொடங்கிய முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள்- மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

நெல்லையில் தொடங்கிய முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள்- மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

X
விளையாட்டுப்

விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

Tirunelveli | நெல்லையில் முதலமைச்சர் கோப்பை காண போட்டி தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது. 19 வயதிற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் பதிவு செய்துள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றை சுருள், வாள் வீச்சு. இரட்டைக் கம்பு வீச்சு, மான் கொம்பு வீச்சு உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.

மாணவர்கள் 700 பேரும் மாணவிகள் 350 பேரும் இப்போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மாநில அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளன.

போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்

அதில் முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயும் இரண்டாவது பரிசாக 75 ஆயிரம் ரூபாயும் மூன்றாவது பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளன.

மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு வெகுமதிகள் வழங்கப்பட உள்ளன. அதில் முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 2,000 ரூபாயும் மூன்றாவது பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இப்போட்டியை உதவி ஆட்சியர் கோகுல் தொடங்கி வைத்தார்.

கொடுக்காப்புளி சாப்டிருக்கீங்களா? நெல்லையில் படுஜோர் விற்பனை

அப்போது அவருடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

First published:

Tags: Local News, Tirunelveli