முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வாயிலாக கட்டிடம் இல்லாமல் வழங்குவதற்காகவும், சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து மக்களுக்கும் உலக தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.37 கோடி குடும்பங்கள் ஆண்டொன்றுக்கு ரூபாய் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வசதி பெற முடியும்.
இத்திட்டத்தில் 11 தொடர் சிகிச்சை முறைகள் 52 முழுமையான பரிசோதனை முறைகள் உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 110 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இன்றி பெறலாம். மேலும், 86 கூடுதல் சிகிச்சை முறைகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க : ஆளை மயக்கும் அவலாஞ்சி... ஊட்டி வனப்பகுதிக்குள் ஒரு மினி சொர்க்கம்..
திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 11,335 பேர் காப்பீட்டு திட்ட அட்டைகளை பெற்றுள்ளனர். இதன் மூலம் ரூபாய் 68 கோடியே 98 லட்சத்து 14 ஆயிரத்து 360 மதிப்பில் 42,534 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் என தெரிகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.