ஹோம் /திருநெல்வேலி /

சிக்கன் லெக் பப்ஸ் கேள்விபட்டிருக்கீங்களா? திருநெல்வேலி இளைஞர்களை கவர்ந்திழுக்கும் புதுவரவு

சிக்கன் லெக் பப்ஸ் கேள்விபட்டிருக்கீங்களா? திருநெல்வேலி இளைஞர்களை கவர்ந்திழுக்கும் புதுவரவு

X
சிக்கன்

சிக்கன் லெக் பப்ஸ்

Tirunelveli | திருநெல்வேலியிலுள்ள முக்கிய பேக்கரியில் அறிமுகப்படுத்தப்பட்ட சிக்கன் லெக் பப்ஸ் இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் உள்ள அரசன் பேக்கரியில் ஒரு வாரத்திற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட சிக்கன் லெக் பப்ஸ் ருசி செமையாக உள்ளதாக சோசியல் மீடியாவில் இளைஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எல்லாரும் வெஜ் பப்ஸ், எக் பப்ஸ் டேஸ்ட் பண்ணி இருப்போம். இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான அரசன் பேக்கரியில் சிக்கன் லெக் பப்ஸ் ஒரு வாரத்திற்கு முன்பு அறிமுகம் செய்துள்ளனர். அசைவ உணவு பிரியர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. இளைஞர்கள் வந்து சாப்பிட்டுவிட்டு தங்களது சோசியல் மீடியாவில் அதன் அனுபவம் குறித்து பதிவிட்டனர். அதற்கு கமெண்டில் நல்ல வரவேற்பு இருந்தது.

தற்போது நெல்லை அரசன் பேக்கரிக்கு இளைஞர்கள் மட்டும் இல்லாது பொதுமக்களும் வர தொடங்கிவிட்டனர். சிக்கன் லெக் பப்ஸ் விற்பனை செய்ய ஐடியா அதன் நிர்வாகத்துக்கு வந்தவுடன் ஊழியர்கள் ஸ்பெஷல் ஆக பணியமர்த்தப்பட்டனர். இந்த சிக்கன் லெக் பப்ஸ் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறது என்று மேலளர் தெரிவித்தார்.

சிக்கன் லெக் பப்ஸ்

திருநெல்வேலியில் அரசன் பேக்கரி மெயின் ப்ரான்ச் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ளது. மேலும் அதன் கிளை வ உ சி மைதானம், கோர்ட், டவுன், மேலப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ளன. அரசன் பேக்கரி மூன்று தலைமுறைகளாக இருந்து வருகிறது. சிக்கன் லெக் பப்ஸ் சூடாகவும் தரமாகவும் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கிடைக்கும் என ஊழியர்கள் தெரிவித்தனர். அசைவ உணவு பிரியர்கள் பேக்கரிக்கு நேரில் வந்தும் சாப்பிடலாம் எனவும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் மூலம் பதிவு செய்து பெறலாம் எனவும் அதன் மேலாளர் தகவல் தெரிவித்தார்.

உலகப்புகழ் பெற்ற பத்தமடை பாய்.. இதன் தனித்துவமும், சிறப்புகளும் தெரியுமா?

இந்த பேக்கரிக்கு பலமுறை வருவதாகவும் தற்போது விற்பனையாகும் இந்த சிக்கன் லெக் பப்ஸ் ருசியாக உள்ளது இதுகுறித்து தங்கள் நண்பர்களிடம் தெரிவித்துள்ளோம் என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். மொத்தமாக ஆர்டர் செய்தால் நல்ல விலையில் தயார் செய்யப்பட்டு கொடுக்கப்படுகிறது எனவும் இதன் விலை 75 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்: சந்தானம், திருநெல்வேலி.

First published:

Tags: Local News, Tirunelveli