டிஜிட்டல் உலகில் கால மாற்றங்கள் மாற மாற நம் வாழ்வியல் முறையும் மாறிக்கொண்டே வருகின்றன. நாவுக்கு சுவையூட்டும் பீட்சா, பர்கர், சாண்ட்விச் என வெரைட்டி வெரைட்டியாக சாப்பிடுவதை விட, ஒருமுறை 90's கிட்ஸ் சாப்பிட்ட ஜவ்வு மிட்டாயை ருசித்துப் பார்ப்போமே?
ஜவ்வு மிட்டாய் அதன் ருசி தனி இன்றைய 2k கிட்ஸ்சிடம் ஜவ்மிட்டாய் வேண்டுமா என்று கேட்டால், அவர்கள் கேட்கும் முதல் கேள்வி அது என்ன ஜவ்வு மிட்டாய் என்பதாகத்தான் இருக்கும்.
சர்க்கரை, தண்ணீர், சிறிது கலர் பவுடரை சேர்த்து முதல் பதத்தில் எடுப்பதுதான் இந்த ஜவ்வு மிட்டாய். இந்த மிட்டாயில் நெக்லஸ், மயில், கோழி என சிற்பிகளை மிஞ்சும் அளவிற்கு இரண்டு விரல்களில் அந்த ஜவ்வு மிட்டாய் வடிவமைக்கும் விதம் காண கிடைக்காத ஒன்று.
இதுகுறித்து களக்காட்டைச் சேர்ந்த, தலைமுறை தலைமுறையாக ஜவ்வு மிட்டாய் வியாபாரம் செய்யும் வியாபாரியிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:- "என் பெயர் வெங்கடாசலம். நான் களக்காடு பகுதியில் சேர்ந்தவன். எனக்கு 48 வயது ஆகிறது. நான் ஜவ்வு மிட்டாய் விற்கும் தொழிலை 28 வருடமாக செய்து வருகிறேன். எனக்கு முன்னதாக என் அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா என பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகிறோம்.
<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>
நான் திருநெல்வேலி மாநகரம் முழுவதும் ஜவ்வு மிட்டாய் வியாபாரம் செய்கிறேன். குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை பொழுதில் புட்டாத்தி அம்மன் கோயில் வாசலில் வியாபாரம் செய்கிறேன்.
முன்பெல்லாம் ஜவ்வு மிட்டாய், ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் வரை வியாபாரமானது. ஆனால், தற்போது 500 ரூபாய்க்கு கூட விற்பனை ஆகவில்லை. என் மகன் காலத்து குழந்தைகளுக்கு ஜவ்வு மிட்டாய் மீது இருந்த ஆர்வம், இப்போதைய குழந்தைகளுக்கு இல்லை என வேதனை தெரிவித்தார்.
இந்த மிட்டாய் எப்படி சுவைப்பது என்று கூட தற்போதுள்ள குழந்தைகளுக்கு தெரிவதில்லை என வருத்தத்துடன் கூறினார் ஜவ்வு மிட்டாய் வியாபாரி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli