முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் கால்நடை வளர்ப்பு பயிற்சி முடித்த திருநங்கைகளுக்கு சான்றிதழ்..

நெல்லையில் கால்நடை வளர்ப்பு பயிற்சி முடித்த திருநங்கைகளுக்கு சான்றிதழ்..

கால்நடை வளர்ப்பு பயிற்சி முடித்த திருநங்கைகளுக்கு சான்றிதழ்

கால்நடை வளர்ப்பு பயிற்சி முடித்த திருநங்கைகளுக்கு சான்றிதழ்

Tirunelveli News : கால்நடை வளர்ப்பு பயிற்சி முடித்த திருநங்கைகளுக்கு சான்றிதழ் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் திருநங்கைகளுக்கு இலவச கால்நடை வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. 

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வட்டார பகுதியில் உள்ள திருநங்கைகளுக்குநபார்டுவங்கி உதவியுடன் கால்நடை வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், நிதி சார் கல்வி ஆலோசகர் மகாலிங்கம், இந்தியன் வங்கி மேலாளர் ஜான்ஜோசப், நபார்டு வங்கி மேலாளர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

திருநங்கைகளுக்கான கால்நடை வளர்ப்பு பயிற்சியானது மார்ச் மாதம் 15 நாட்கள் நடைபெற்றது. இந்த 15 நாட்களும் திருநங்கைகள் விடுமுறையின்றி தொடர்ந்து பயிற்சி பெற்றனர். இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. எனவே வள்ளியூர் வட்டார பகுதியில் உள்ள திருநங்கைகள்இதனைபயன்படுத்திகொண்டனர்.

இப்பயிற்சி கடந்த மார்ச் 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பயிற்றுநர் திருநங்கைகளுக்கு பல்வேறு விதமான பயிற்சி அளித்தனர். குறிப்பாக கோழி, ஆடு, பன்றி, மாடு உள்ளிட்டவற்றை வாங்குவதுதொடர்பாகபயிற்சி கடன் வசதி செய்து கொடுப்பது தொடர்பான பயிற்சி, விலங்குகளுக்கு எவ்வாறு இடம் அமைக்க வேண்டும் நோய் வராமல்எப்படிபாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்டவை தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன் மூலம் எப்படி வருமானம் ஈட்ட வேண்டும் உள்ளிட்டவை தொடர்பான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இந்நிலையில் பயிற்சி முடித்த திருநங்கைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

First published:

Tags: Local News, Tirunelveli