முகப்பு /திருநெல்வேலி /

உலக அருங்காட்சியகம் தினம்.. நெல்லையில் சிறப்பு கொண்டாட்டம்!

உலக அருங்காட்சியகம் தினம்.. நெல்லையில் சிறப்பு கொண்டாட்டம்!

நெல்லை அரசு அருங்காட்சியகம்

நெல்லை அரசு அருங்காட்சியகம்

Museum day | நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக அருங்காட்சியக தின கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் அறிவோம் அருங்காட்சியகங்களைஎன்கின்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன.

பள்ளி மாணவ மாணவிகளின் தனித்திறமைகளையும் வெளிப்படுத்தும் விதமாகவும் அருங்காட்சியகம் பற்றிய அறிவினை அவர்களுக்கு அதிகரிக்கும் வகையில் ஐந்து முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இளைய தலைமுறைக்கு அருங்காட்சியகத்தின் பயன்கள் என்கிற தலைப்பில் கட்டுரை போட்டியும் 8 முதல் 10 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அருங்காட்சியகங்கள் என்கிற தலைப்பில் பேச்சுப் போட்டியும் 11,12 ஆம் வகுப்புமற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நெல்லை அருங்காட்சியகத்தில் அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு அரும்பொருள் என்கிற தலைப்பில் ஓவிய போட்டியும் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். இப் போட்டிகளை தொடர்ந்து புதையலை தேடி என்கிற விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது.

இதில் நெல்லை அருங்காட்சியகத்தில் உள்ள அரும்பொருள்களை மாணவர்கள் கண்டுபிடிக்கும் வகையில்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்டுபிடிப்போம் அரும்புொருளை என்கிற தலைப்பில் அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருள்களின் புகைப்படங்களை காண்பித்து அவை இருக்கும் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் போட்டியும் நடத்தஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அருங்காட்சியகங்கள் நிலைப்புத் தன்மை மற்றும் நல்வாழ்வு என்கிற தலைப்பில் நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர்சிவ.சத்திய வள்ளிசிறப்புரைதொடர்ந்துதமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.உடனடி கவிதை எழுதும் போட்டி நடைபெற உள்ளது.

இப்போட்டியின் தலைப்பு போட்டி துவங்கும் நேரத்தில் அறிவிக்கப்படும் இந்த கவிதை போட்டியில் சிறியவர் முதல் பெரியவர் வரை விருப்பம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

அதனைத் தொடர்ந்து தமிழர் வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெறுவது மொழியாக கலையா என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படும்என்கிற தகவலை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tirunelveli