திருநெல்வேலி மாவட்டம் பேட்டை ஐ.டி.ஐ.யில் மார்ச் 20ம் தேதி தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருநெல்வேலி பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) இம்மாதம் 20ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திருநெல்வேலி மண்டல அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
இதில், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தோர் கலந்துகொள்ளலாம். மத்திய மாநில அரசு தனியார் துறையை சேர்ந்த 70 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்கு தேவையான இளைஞர்கள் இளம் பெண்களை தேர்வு செய்கின்றனர்.
கல்வி தேர்ச்சி சான்றிதழ் 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை அவசியம். மேலும் விவரங்களுக்கு ஐடிஐக்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0462 2342432 மற்றும் 9499055790 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli