திருநெல்வேலி மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் இந்தாண்டுக்கான கணக்கெடுப்பு பணிகள் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கி 7 நாட்கள் நடைபெற்றது.
வனத்துறை ஊழியர்கள் 80-க்கும் மேற்பட்டோர் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு, களக்காடு வனசரகத்தில் 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்தில் 8 குழுவினரும், கோதையாறு வனசரகத்தில் 5 குழுவினரும் கணக்கெடுப்பு நடத்தினர்.
கணக்கெடுப்பு குழுவினர் தாங்கள் சேகரித்த புள்ளி விவரங்களை செல்போன் ஆப் மூலம் பதிவு செய்தனர். அப்போது சேகரிக்கப்பட்ட வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி, களக்காடு, கோதையாறு வனப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடங்கின. 3 வனசரகங்களிலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அடர்ந்த வனப்பகுதியில் 60 அதிநவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் உத்தரவின் பேரில் வனச்சரகர்கள் களக்காடு பிரபாகரன், திருக்குறுங்குடி யோகேஸ்வரன், கோதையாறு சிவலிங்கம் மற்றும் வனத்துறையினர் கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். ‘
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், இதில் பதிவாகும் காட்சிகள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும், அங்கு நடைபெறும் ஆய்வுக்கு பின்னர் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரியவரும் என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.