முகப்பு /திருநெல்வேலி /

"அனைத்து வேலைக்கும் தட்டச்சு பயிற்சி முக்கியம்" நெல்லை வணிகவியல் பொருளாளர்!

"அனைத்து வேலைக்கும் தட்டச்சு பயிற்சி முக்கியம்" நெல்லை வணிகவியல் பொருளாளர்!

X
தட்டச்சு

தட்டச்சு அரசு வேலைக்கு மட்டுமல்ல சுய வேலை வாய்ப்பிற்கும் முக்கியம்

Nellai news | ஏதேனும் ஒரு நிலையில் கணினியில் அமர்ந்து வேலை செய்யத் துவங்கும்போது இந்த தட்டச்சுப் பயிற்சி அப்போது பெரும் உதவியாக இருக்கும் - வணிகவியியல் பள்ளிகளின் சங்க பொருளாளர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்ட வணிகவியியல் பள்ளிகளின் சங்க பொருளாளர் சுந்தரமுருகன் தட்டச்சு குறித்தும் அதனால் ஏற்படும் நன்மையை குறித்தும்  நம்மிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

கணினிகளின் பயன்பாடு அரசு தனியார் துறைகளில் அடிப்படையாக அமைந்துவிட்டது. ஆனால் கணினியில் வேலை பார்ப்பவர்களுள் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தட்டச்சுப் பயிற்சி என்பது அடிப்படை அளவில்கூட இல்லை எனத் தெரிகிறது.

முன்பெல்லாம் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் 10வது முடித்துவிட்டாலே தட்டச்சு பயிற்சிகளுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். ஆனால் இன்று கணினி என்பது அடிப்படை என்பதை அறிந்த பிறகும் தட்டச்சுப் பயிற்சியைக் கொடுக்காமல் இருப்பதற்கு காரணம் தெரியவில்லை என அதன் பயிற்றுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட வணிகவியியல் பள்ளிகளின் சங்க பொருளாளர் சுந்தரமுருகன் நம்மிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். ஆண்டுதோறும் எட்டரை இலட்சத்திற்கும் அதிகமானோர் +2 தேர்வு எழுதினாலும் அவர்களில் 10 சதவீதம் கூட ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படும் இந்த தொழில்நுட்பத் தேர்வுகளில் கலந்து கொள்ளுவதில்லை.

9ஆம் வகுப்பு படிக்கும்போதே மாணவ, மாணவியர் ஆங்கில தட்டச்சு கீழ் நிலையில் பயிற்சி எடுக்கலாம். இதனால் 9ஆம் வகுப்பு முடிக்கும்போதே ஆங்கில தட்டச்சில் கீழ் நிலை மற்றும் மேல் நிலை பயிற்சியை முடித்துவிடலாம். அடுத்த ஆண்டு தமிழ் தட்டச்சில் கீழ் நிலை, மேல் நிலைப் பயிற்சினை முடித்து விடலாம். இதன்மூலம் +2 முடித்து அந்தத் தேர்ச்சியுடன் தொழில்நுட்பத் தேர்வு தேர்ச்சியையும் இணைத்து வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து வைக்கலாம். இதனால் கூடுதல் தகுதியுடன் +2 கல்வி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் குரூப் 4 பகுதிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னிலையில் இருக்கலாம். +2 பிறகு பட்டப் படிப்பை தொடர்ந்து முடித்தாலும் இந்த தொழில்நுட்ப பயிற்சி தேர்வு என்பது கூடுதல் தகுதியாக அவர்களுடன் என்றென்றும் இணைந்திருக்கும்.

இதையும் படிங்க | நெல்லையில் கோடை விடுமுறையை கழிக்க சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஏதேனும் ஒரு நிலையில் கணினியில் அமர்ந்து வேலை செய்யத் துவங்கும்போது இந்த தட்டச்சுப் பயிற்சி அப்போது பெரும் உதவியாக இருக்கும். தட்டச்சு தேர்ச்சியை அடிப்படையாக கொண்ட பல்வேறு பகுதிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். எளிமையாக ஒரு கணினியை நிறுவி தரவுகளைப் பதிவு செய்து கொடுக்கும் வேலையை செய்து கொடுக்கும் சுய வேலைவாய்ப்பிற்கும் இது அடிப்படையாக அமையும் என தெரிவித்தார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Nellai, Tirunelveli