முகப்பு /திருநெல்வேலி /

பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - நெல்லை ஆட்சியர் தகவல்!

பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - நெல்லை ஆட்சியர் தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

Nellai Collector : பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக கடன் பெற விண்ணப்பிக்கலாம் என நெல்லை கலெக்டர் அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் சிறு தொழில் வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு பொது காலக்கடன் பெண்களுக்கு சிறு கடன் மகளிர் காண புதிய பொற்கால கடன் ஆடவருக்கான சிறு கடன் கறவை மாட்டு கடன் போன்ற பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும் ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும் பொது கால கடன் திட்டம் மூலம் சிறு தொழில் வியாபாரம் செய்ய அதிகபட்சமாக தனிநபர் கடன் ரூபாய் 15 லட்சம் வரை வழங்கப்படும் ஆண்டுவட்டி விகிதம் 6 முதல் 8 சதவீதம் வரை வசூலிக்கப்படும் பெண்களுக்காக புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூபாய் 2 லட்சம் கடன் உதவி வழங்கப்படுகிறது.

ஆண்டு வட்டி விகிதம் 5% ஆகும் சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது ஆண்டு வட்டி விகிதம் 4% ஆகும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஜாதி சான்று வருமானச் சான்று இருப்பிட சான்று திட்ட அறிக்கை ஆதார் அட்டை குடும்ப அட்டை வங்கி கூறும் ஆவணங்கள் ஆகியவற்றின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

திருநெல்வேலி மாவட்ட . பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொக்கிரகுளம் பாளையங்கோட்டை 6 2 7 00 9 மேலாண்மை இயக்குனர் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எம்.ஜி.ஆர் மாளிகை வண்ணாரப்பேட்டை திருநெல்வேலி 627003 கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் திருநெல்வேலி மெய்ஞான தெரு, பாளையங்கோட்டை ஆகிய அலுவலகங்களுக்கு தபாலில் அனுப்பலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இது தவிர அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் அனைத்து விவசாய கூட்டுறவு வங்கி கிளைகள் அனைத்து நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Tirunelveli