முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் ஏப்.21 தனியார் வேலைவாய்ப்பு முகாம் - இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!

நெல்லையில் ஏப்.21 தனியார் வேலைவாய்ப்பு முகாம் - இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வேலை நாடுபவர்கள், வேலை அளிக்க விரும்பும் தனியார் நிறுவனங்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏப்ரல் 21-ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை 17 சி சிதம்பரம் நகர் பெருமாள்புரம் சி காலணியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்தவேலை வாய்ப்பு முகாம் காலை 10:30 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் கல்விச்சான்று மற்றும் இதர சான்றுகளுடன் வரவேண்டும் இதில் பணி நியமனம் பெற்றாலும் அரசு வேலைவாய்ப்புக்கான பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வேலை நாடுபவர்கள், வேலை அளிக்க விரும்பும் தனியார் நிறுவனங்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களை நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ் டெலிகிராம் சேனலில் இணைந்து அறியலாம்.

மேலும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்துப் போட்டி தேர்வுகளுக்கான பாட குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார்

First published:

Tags: Employment, Local News, Tirunelveli