முகப்பு /திருநெல்வேலி /

வழக்குகளை விரைந்து முடிக்க சமரச மையத்தை நாடுங்கள் - நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் வேண்டுகோள்!

வழக்குகளை விரைந்து முடிக்க சமரச மையத்தை நாடுங்கள் - நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் வேண்டுகோள்!

X
மாதிரி

மாதிரி படம்

Tirunelveli News : வழக்குகளை விரைந்து முடிக்க சமரச மையத்தை நாடுங்கள் என்று திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழ்நாட்டில் சமரச மையம் ஆரம்பிக்கப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பொதுமக்கள் சமரச மையத்தின் மூலம் வழக்குகளை விரைவாக சமரசம் முடிப்பது பற்றிய சமரச தின விழிப்புணர்வு துண்டு பிரசார வாகனம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், “வழக்குகளை விரைந்து முடிக்க சமரச மையத்தை நாடுங்கள்” என நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார்.

கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது, “சமரச மையம் என்பது இரு தரப்பினரும் சந்தோஷமான முறையில் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதாகும். இன்றைய சமரசம் நாளைய சந்தோஷம் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு வாகனம் மாவட்டம் முழுவதும் செல்ல உள்ளது.

இதையும் படிங்க : "ஆயிரங்களில் முதலீடு அசத்தல் லாபம்" அஞ்சலகத்தில் பெண்களுக்கு சூப்பர் திட்டம் அறிவிப்பு!

சிறு பிரச்சனைகளுக்கு கூட பேசி தீர்த்துக்கொள்ளாமல் அதை பெரிதாக்கி உச்ச நீதிமன்றம் வரை செல்லக்கூடாது. இரு தரப்பினரிடையே யார் வெற்றி பெறுவது என்ற எண்ணம் இருக்கக் கூடாது. சமரச மையங்கள் மூலம் பிரச்சனைகள் அதிகமாக தீர்த்து வைக்கப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் நம்பிக்கையுடன் நீதிமன்றத்திற்கு வருவார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சமரச மையத்தில் பிரச்சனை தீர்த்து வைக்கப்படுவதால் இரு தரப்பினரும் வெற்றியாளர்கள். இதில் வெற்றியாளர்கள் தோல்வியாளர்கள் என்ற போட்டி நிகழாது. விவாகரத்து வழக்குகள் திருமணங்களில் பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பான வழக்குகள் சமரச மையங்கள் மூலம் விரைவில் தீர்வு காணப்படுகின்றன. எனவே பொதுமக்கள் இந்த நீதிமன்றத்தை நாடி பயன் பெற வேண்டும்” என தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Tirunelveli