முகப்பு /திருநெல்வேலி /

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஓய்வு பெறும் பேராசிரியர்களுக்குப் பாராட்டு விழா!

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஓய்வு பெறும் பேராசிரியர்களுக்குப் பாராட்டு விழா!

நெல்லை சதுக்கத்துல்லா கல்லூரி

நெல்லை சதுக்கத்துல்லா கல்லூரி

Tirunelveli news | பாளையங்கோட்டை அருகே சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பணி நிறைவு பெறும் பேராசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் சார்பில், இவ்வாண்டு பணி நிறைவு பெறும் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ.மு.அயூப் கான், கணிதத்துறைத் தலைவர் முனைவர் ரஷீதா பேகம் ஆகியோருக்குப் பாராட்டு விழாகல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது.

ஆசிரியர் மன்றத்தின் செயலாளர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார். ஆசிரியர் மன்றத் தலைவர் முனைவர் ஏ.சாகுல்ஹமீது தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர், கல்லூரித் தேர்வாணையர் முனைவர் சித்தி ஜமீலா, ஆசிரியர் மன்றப் பொருளாளர் முனைவர் எஸ்.முஹம்மது ஹனீப் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இதையும் படிங்க | நெல்லையில் ஆண்களுக்கும் தனியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்த கோரிக்கை!

பணி நிறைவு பெறும் இரு பேராசிரியர்களுக்கும் ஆசிரியர் மன்றத்தின் சார்பில், கல்லூரி முதல்வர் முனைவர் அ.மு.அப்துல் காதர், ஆசிரியர் மன்றத் தலைவர் முனைவர் ஏ.சாகுல்ஹமீது ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர். பேராசிரியர் அ.மு.அயூப் கான், பேராசிரியை ரஷீதா பேகம் ஆகியோர் ஏற்புரை வழங்கினர். இந்நிகழ்வில் பேராசிரியர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தனர். ஆசிரியர் மன்றத் துணைத் தலைவர் கலீல் அஹமது நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி ஆசிரியர் மன்றம் சிறப்பாகச் செய்திருந்தனர்.

First published:

Tags: Local News, Tirunelveli