முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு..

நெல்லையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு..

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு சான்றிதழ்

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு சான்றிதழ்

Tirunelveli District News | திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார், திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினரை ஊக்குவிக்கும் வகையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை குற்றம் நடக்காமல் தடுத்து சிறப்பாக பணிபுரிந்ததற்காக உதவி ஆய்வாளர் செல்வகுமார்தலைமையிலான நான்கு பேருக்கும், அம்பாசமுத்திரம் உட்கோட்ட உதவி ஆய்வாளர் முருகேஷ் தலைமயிலான 5 காவலர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இதையும் படிங்க : மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது!

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் கைதான குற்றவாளிக்கு 7ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் பெற்று கொடுத்தற்காக விசாரணை அதிகாரிகளான காவல் ஆய்வாளர்கள் நாககுமாரி,கௌரி மனோகரி மற்றும் இரண்டு பெண் காவலர்களை,காவல்துறை துணைத் தலைவர் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய ஆதாய கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்தமைக்காக காவல் ஆய்வாளர் மகேஷ்வரி, உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் 15 பேருக்குகாவல்துறை துணைத் தலைவர்பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.

First published:

Tags: Local News, Tamilnadu police, Tirunelveli