முகப்பு /திருநெல்வேலி /

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்... நெல்லையில் எந்த தேதியில் நடக்கிறது தெரியுமா?

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்... நெல்லையில் எந்த தேதியில் நடக்கிறது தெரியுமா?

மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளி

Tirunelveli | நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற வழங்கும் முகாம் 2 நாட்கள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் அளித்துள்ளார். 

  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க வருகிற 26, 27ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையான அட்டை பெற்று யுடிஐடி, (தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை) பெறாத மாற்றுத்திறனாளி நபர்கள் தங்களது வட்டத்திற்கு உட்பட்ட அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் சென்று (நடக்க இயலாத மாற்றுத்திறனாளி நபர்களுக்கு அவர்களின் பாதுகாவலர்களுடன் செல்லலாம். 26ம் தேதி மற்றும் 27-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 முதல் 2மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் முகாமில் விண்ணப்பித்து பயனடை யலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Physically challenged, Tirunelveli