முகப்பு /செய்தி /திருநெல்வேலி / பல் பிடுங்கிய விவகாரத்தில் சிறார்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் கடும் நடவடிக்கை - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்

பல் பிடுங்கிய விவகாரத்தில் சிறார்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் கடும் நடவடிக்கை - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த்  ஆய்வு

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் ஆய்வு

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், சிறார்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் உணவு கூடம், சிறார்கள் தங்கும் அறை, வகுப்பறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருக்கும் சிறார்கள் உடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், ’கூர்நோக்கு இல்லங்களை கண்காணிக்க பிரத்தியேக செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், சிறார்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Thirunelveli