முகப்பு /செய்தி /திருநெல்வேலி / ”பல்வீர் சிங் மிகவும் நல்லவர்”- பல் பிடுங்கிய புகாருக்கு ஆளான ஏ.எஸ்.பிக்கு ஆதரவாக பேனர்...

”பல்வீர் சிங் மிகவும் நல்லவர்”- பல் பிடுங்கிய புகாருக்கு ஆளான ஏ.எஸ்.பிக்கு ஆதரவாக பேனர்...

பல்வீர் சிங்க்கு ஆதரவாக பேனர் வைத்த பொதுமக்கள்

பல்வீர் சிங்க்கு ஆதரவாக பேனர் வைத்த பொதுமக்கள்

Balveer Singh Issue | அம்பாசமுத்திரம் பகுதியில் பல்வீர் சிங் பணியில் சேர்ந்த பிறகு குற்றச்சம்பவங்கள் குறைந்திருப்பதாக பொதுமக்கள் வீடியோ வெளியிட்டனர்.

  • Last Updated :
  • Ambasamudram, India

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங்கிற்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

குற்றவழக்குகளில் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வருபவர்களின் பற்களை பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், புகார் குறித்து மாநில மனித உரிமை ஆணையமும், சேரன்கமகாதேவி உதவி ஆட்சியரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய ஏ.எஸ்.பி பல்வீர் சிங் நல்லவர் என்றும் அவர் அம்பாசமுத்திரம் பகுதியில் பணியில் சேர்ந்த பிறகு குற்றச்சம்பவங்கள் குறைந்திருப்பதாகவும் மக்கள் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், ‘கோவில் கொடை விழாவிற்கு வந்து பாதுகாப்பு அளித்தார் என்றும் எங்கள் பகுதியில் சி.சி.டி.வி கேமராக்கள் வைக்க நடவடிக்கை மேற்கொண்டார். அவர் பொதுமக்களிடம் எளிமையாக பேசினார். இதனால் ஊர் மக்கள் அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்ததாக தெரிவி்த்தனர்.

செய்தியாளர்: சிவமணி

top videos
    First published:

    Tags: Tirunelveli