முகப்பு /செய்தி /திருநெல்வேலி / புது மாப்பிள்ளைக்கு அந்தரங்க உறுப்பில் தாக்குதல்... பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் அதிரவைத்த வாக்குமூலம்!

புது மாப்பிள்ளைக்கு அந்தரங்க உறுப்பில் தாக்குதல்... பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் அதிரவைத்த வாக்குமூலம்!

பல்பீர் சிங்

பல்பீர் சிங்

Tirunelveli police | அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்பீர்சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி, கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

  • Last Updated :
  • Tirunelveli, India

பற்களை பிடுங்கி சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை போலீசார் மிரட்டியதாகவும், கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் மாநில மனித உரிமை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்பீர்சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி, கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட 5 பேர் சென்னையில் உள்ள அலுவலகத்தில் டிஎஸ்பி சுந்தரேசன் முன்பு ஆஜராகினர்.

அப்போது  அவர்கள், போலீசார் தங்களை மிரட்டுவதாகவும் அச்சத்தின் காரணமாகவே புகார் கொடுக்காமல் இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நான்கு பற்களை ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டு சித்திரவதை செய்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். புதிதாக திருமணமான என்பதால் ஒருவரை போலீசார் விதைப்பையில்  கொடூரமாக தாக்கியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் மீது இதுவரை எந்த குற்ற வழக்கும் இல்லை என்பது தெரியவந்துள்ள நிலையில், மனித உரிமைகள் ஆணையம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிலரை திங்கட்கிழமை விசாரணைக்கு வரவழைக்க கூறியுள்ளனர்.

செய்தியாளர்:ஐயப்பன், நெல்லை.

First published:

Tags: Crime News, Police, Tirunelveli