முகப்பு /திருநெல்வேலி /

பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மேம்பாட்டிற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு - பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு

பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மேம்பாட்டிற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு - பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு

X
பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி

Tirunelveli district | திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்வோம்.

  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழக சட்டப்பேரவையில் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2ஆவது முழுமையான பட்ஜெட்டாகும். 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பயன் அளித்திட வேண்டும் என்ற நோக்கில் ஏழு மாவட்டங்களில் நியோ டைட்டில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் நீட்சியாக ஈரோடு, செங்கல்பட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் திருநெல்வேலியில் ஒரு லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் நான்கு ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வாழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் வாழைக்கென தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    இதேபோல் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.40 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Tirunelveli