முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை ராம் தியேட்டரில் திரையிடப்பட்ட அஜித் Mashup.. ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!

நெல்லை ராம் தியேட்டரில் திரையிடப்பட்ட அஜித் Mashup.. ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!

X
நெல்லை

நெல்லை ராம் தியேட்டர்

Ajith birthday | உலகம் முழுவதும் நடிகர் அஜித்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

நடிகர் அஜித்தின் 52-வது பிறந்தநாளை திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர்கள் ராம் தியேட்டரில் உற்சாகமாக கொண்டாடினர்.

அஜித் பிறந்தநாள் பரிசாக ஏகே 62 படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘விடாமுயற்சி' என்ற மாஸ் ஆன டைட்டிலை வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதைப்பார்த்து உற்சாகத்தில் திளைத்துப் போன ரசிகர்கள், இந்தப் படம் அஜித்துக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும் என பதிவிட்டு வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுக்கும் விதமாக லைகா நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட்டுள்ளதால், சோசியல் மீடியா பரபரப்படைந்துள்ளது.‘விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க உள்ளனர்.

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக இதனை எடுக்க மகிழ் திருமேனி திட்டமிட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி அஜித்தின் கடந்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தமிழ் திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக திகழும் அஜித்திற்கு திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கில் மாஸ் மேஷப் திரையிடப்பட்டது. இதனைப் பார்த்த பிறகு வெளியே வந்த ரசிகர்கள் நம்மிடம் மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். முக்கியமாக அதில் பலர் அஜித்திற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Actor Ajith, Ajith fans, Local News, Tirunelveli