ஹோம் /திருநெல்வேலி /

ஏசி அறை; ரூ.12 மட்டுமே கட்டணம்.... பாளை பேருந்து நிலையத்திலுள்ள படிப்புக் கூடம் பற்றித் தெரியுமா?

ஏசி அறை; ரூ.12 மட்டுமே கட்டணம்.... பாளை பேருந்து நிலையத்திலுள்ள படிப்புக் கூடம் பற்றித் தெரியுமா?

X
படிப்புக்

படிப்புக் கூடம்

Tirunelveli | திருநெல்வேலி பாளை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள படிப்புக் கூடம் அரசுத் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு வரமாக அமைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டதால் வேலை வாய்ப்பு பெறுவது இளைஞர்களுக்கு சவாலாக உள்ளது. தனியார் நிறுவனங்கள் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கினாலும் கூட பணி பாதுகாப்பு இல்லாததால் இளைஞர்கள் அரசு வேலையை பெற முயற்சிக்கின்றனர்.

இதனால் பயிற்சி அகாடமிகளும் அதிகமாகி விட்டன. தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பணம் கட்டி படிக்க முடியாத இளைஞர்கள் பார்க் போன்ற இடங்களில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.

படிப்புக் கூடம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாளை பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் தேர்விற்கு படித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தேர்வர்களை பார்த்துள்ளனர். பின்பு காரில் இருந்து இறங்கிய இருவரும் தேர்வர்களிடம் பேசினர்.

அப்போது தேர்வர்கள் தங்களின் நிலைமையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் விளக்கிக் கூறினார். உடனே தேவர்கள் படிப்பதற்கு வசதியான இடத்தை ஏற்படுத்தி தருவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உறுதியளித்தனர்.

அதன்படி விரைவிலேயே பாலை பேருந்து நிலையம் மேல் தளத்தில் குளிரூட்டப்பட்ட நூலகத்துடன் படிப்பு கூடம் அமைத்துக் கொடுத்தனர். இங்கு ஒரு நாளைக்கு 12 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை எளிதாக கொடுக்க முடிவதாக தேவர்கள் தெரிவித்தனர்.

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா - பிப்ரவரி 4ம் தேதி தீர்த்தவாரி

இந்த குளிரூட்டப்பட்ட படிப்பு கூடத்தில் 60 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு நிகரான வசதிகளுடன் கூடிய புத்தகங்கள் இங்கு கிடைப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர்: சந்தானம், திருநெல்வேலி.

First published:

Tags: Local News, Tirunelveli