முகப்பு /திருநெல்வேலி /

ஜெயம் ரவியின் ஆக்சன் பிரமாதம்.. அகிலன் படம் பற்றி அம்பாசமுத்திரம் ரசிகர்களின் ரிவ்யூ!

ஜெயம் ரவியின் ஆக்சன் பிரமாதம்.. அகிலன் படம் பற்றி அம்பாசமுத்திரம் ரசிகர்களின் ரிவ்யூ!

X
அகிலன்

அகிலன்

Agilan Movie Review | ஜெயம் ரவி நடித்த அகிலன் திரைப்படம் பற்றி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ரசிகர்கள் கூறும் ரிவ்யூ.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

அகிலன் படத்தில் ஜெயம் ரவி ஆக்சன் பிரமாதமாக உள்ளதாக திருநெல்வேலி மாவட்ட ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் உருவான பூலோகம் திரைப்படத்தை இயக்கியவர்தான் இந்த கல்யாண கிருஷ்ணன்.

ஜெயம் ரவி, பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அகிலன். இந்த படத்துக்கு இசை சாம் சிஎஸ். ஸ்க்ரீன் சீன் மீடியோ என்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பாலாஜி திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்படம் முடிந்த பின்னர் ரசிகர்கள் கூறுகையில், “கிட்டத்தட்ட எதிர்பார்த்த கதைதான் என்றாலும் திரைக்கதை சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறது. இந்த படம் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும். காரணம் கதையின் போக்கும் கதை சொல்லப்பட்ட விதமும். சில காட்சிகள் கொஞ்சம் நம் பொறுமையை சோதிக்கின்றன.

துறைமுக பின்னணியில் எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அகிலன் படம் ஆரம்பம் முதலே நல்ல சுவாரசியமாக செல்கிறது. இரண்டாவது பாதி கொஞ்சம் சுமாராக செல்கிறது” என்று தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Tamil Cinema, Tirunelveli