முகப்பு /செய்தி /திருநெல்வேலி / கழிவுநீரால் அழிந்து வரும் தாமிரபரணி ஆறு.. நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் கே.என்.நேரு உறுதி

கழிவுநீரால் அழிந்து வரும் தாமிரபரணி ஆறு.. நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் கே.என்.நேரு உறுதி

கழிவுநீரால் அழிந்து வரும் தாமிரபரணி ஆறு.. நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் கே.என்.நேரு உறுதி

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக Save தாமிரபரணி என்ற ஹேஷ்டேக் உடன் நியூஸ் 18 தமிழ்நாடு தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்த நிலையில், கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழ்நாட்டின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி, குடியிருப்பு மற்றும் ஆலை கழிவுகளால் தொடர்ந்து மாசடைந்து வருகிறது.

தமிழ் நாட்டிலேயே உருவாகி, தமிழ் நாட்டிலேயே கடலில் கலக்கிற ஒரே நதி தாமிரபணி. வற்றாத ஜீவ நதிகளில் ஒன்றான தாமிரபரணியின் பிறப்பிடம் மேற்குத் தொடர்ச்சி மலை மீதுள்ள பூங்குளம். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயம் செழிக்க உதவும் இந்த புன்னிய நதி, தற்போது கழிவு நீர் கலப்பால் மாசடைந்து வருகிறது.

விகேபுரம் மதுரா கோட்ஸ் ஆலை முதல் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஆலைகள் வரை, பெரும்பாலான ஆலைகளின் கழிவுகள் தாமிபரணியில் கலக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. சேரன்மகாதேவி பகுதியில் சன் பேப்பர் மில் நிர்வாகத்தினர் கால்வாய் வழியாக ஆற்றில் கழிவுநீரை கலக்கின்றனர். அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், கோபால சமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுகளும் நேரடியாக ஆற்றிலேயே கலக்கப்படுகின்றன.

இதையும் படிக்க : தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் உறுதி

தனியார் ஆலைகள் மட்டுமன்றி, பொதுமக்களும் தங்கள் வீட்டுக் கழிவுகளை ஆற்றில் கலப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், தாமிரபணியை பாதுகாக்க, தன்னார்வலர்கள் சிலர், முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். எனினும் அரசு அதீத அக்கறை காட்டினால் மட்டுமே பலன் கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தாமிரபரணி மாசடைவது குறித்து, நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையாக முடிவடைந்தால் கழிவுகள், ஆற்றில் கலக்கப்படுவதை முற்றிலுமாக தடுக்க முடியும் என்று கூறினார்.

' isDesktop="true" id="993571" youtubeid="pIIkzZooDMo" category="tirunelveli">

இந்நிலையில், தாமிபரணி ஆற்றில் எந்த வகையிலும் கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

விவசாயம் பாதிக்காத வகையில் பொதுமக்களுக்கு குடிநீரையும் வழங்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

top videos

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி மீண்டும் பழைய பொழிவுடன் பொங்கி பாய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

    First published:

    Tags: K.N.Nehru, Polluted river, Thamirabarani