முகப்பு /திருநெல்வேலி /

செடிக்கு உயிர் கொடுக்கும் நெல்லை காவலர்...ஓய்வு நேரத்தில் ஓர் உன்னத செயல்...!

செடிக்கு உயிர் கொடுக்கும் நெல்லை காவலர்...ஓய்வு நேரத்தில் ஓர் உன்னத செயல்...!

X
செடிக்கு

செடிக்கு உயிர் கொடுக்கும் நெல்லை காவலர்...

Thirunelveli | தனது ஓய்வு  நேரத்தை இயற்கையோடு செலவிட்டு வருகிறார் பாளையங்கோட்டை போக்குவரத்து காவலர் சீனிவாசன். இதற்காக வண்ணாரப்பேட்டை மேம்பால தூண்களில் தனது சொந்த செலவில் கூடுதலாக செடிகளை வாங்கி பராமரித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

பாளையங்கோட்டை போக்குவரத்து காவலர் சீனிவாசன் தனது ஓய்வு நேரத்தை இயற்கையோடு செலவிட்டு வருகிறார். இதற்காக வண்ணாரப்பேட்டை மேம்பால தூண்களில் தனது சொந்த செலவில் கூடுதலாக செடிகளை வாங்கி பராமரித்து வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டை மேம்பாலம் தூண்களை அழகுபடுத்தும் விதமாக தனியார் நிறுவனம் சார்பில் சுமார் நான்கு தூண்களை சுற்றி கம்பி பொருத்தப்பட்டு அதில் பூந்தொட்டிகள் மூன்று அடுக்குகளாக வைக்கப்பட்டுள்ளன.

இதனை தனது சொந்த செலவில் பராமரித்து வருகிறார் பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் சீனிவாசன்.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வாடிப்போன செடிகளை மாற்றுவது, அதன் பராமரிப்பு செலவு என 3500 ரூபாய் வரை செலவு செய்துள்ளார். இயற்கை மீது கொண்ட அன்பு காரணமாக தினமும் காலை மாலை வேலைகளில் வண்ணாரப்பேட்டை மேம்பாலத்தில் போக்குவரத்து பணிக்கு பிறகு ஓய்வு நேரத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகிறார். தனது விடுமுறை நாட்களிலும் கூட தூய்மை பணியாளர்களிடம் பணம் கொடுத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற செய்கிறார் சீனிவாசன். இவரைப் பாராட்டி மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் காவலர் சீனிவாசனுக்கு அன்பளிப்பு வழங்கி உள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்தப் பணத்தையும் மேம்பாலத்தின் கீழ் உள்ள செடிகளை பராமரிக்க செலவு செய்துள்ளார் சீனிவாசன். தனது சம்பளத்தில் ஒரு பகுதியை செடிகளை பராமரிக்க செலவிடுவது சிரமமாக இருந்தாலும் கூட மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் நிறைவாக.

மேலும், சொட்டுநீர் பாசனம் அமைத்தால் மேம்பாலத்தின் கீழ் உள்ள செடிகள். வாடுவதை தவிர்க்கலாம். மாவட்டம் முழுவதும் உள்ள மேம்பாலங்களில் தூண்களில் விளம்பரம் செய்யப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற பூச்செடிகள் மேம்பால தூண்களில் அமைத்து பராமரித்தால் விளம்பரங்கள் ஒட்டுவது தவிர்க்கும் வகையிலும் கண்டிப்பாக அமையும்.

First published:

Tags: Local News, Tirunelveli