ஹோம் /திருநெல்வேலி /

நெல்லையில் கோலாகலமாக நடைபெறும் பொருட்காட்சி- குழந்தைகள் உற்சாகம்

நெல்லையில் கோலாகலமாக நடைபெறும் பொருட்காட்சி- குழந்தைகள் உற்சாகம்

X
பொருட்காட்சி

பொருட்காட்சி

Tirunelveli | திருநெல்வேலியில் நடைபெறும் பொருட்காட்சிக்கு பொதுமக்கள், குழந்தைகளுடன் சென்று மகிழ்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் இதுவரை காணாத மாபெரும் எந்திர பறவைகளின் கண்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்காட்சி வ உ சி மணிமண்டபம் பின்புறமுள்ள பொருட்காட்சி திடலில் சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. வரும் 29ஆம் தேதி வரை பொருட்காட்சி செயல்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

பார்வையாளர்கள் மாலை நான்கு மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். விடுமுறை நாட்களை கொண்டாட இந்த எந்திர பறவைகளின் கண்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

புரண்டு விளையாடும் குழந்தைகள் 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ டிராகன் கோஸ்டர், பிரேக் டான்ஸ், எலக்ட்ரிக் கார்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் ஷாப்பிங் செய்ய மேக்கப் ஸ்டால்கள், பேன்சி வளையல் ஸ்டால்கள், வீட்டு உபயோக பொருட்களுக்கான ஸ்டால்கள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அச்சுறுத்தும் பேய் வீடு, 3d ஷோ ஆகியவை மிரட்டலாக அமைக்கப்பட்டுள்ளன. அனைவரும் உண்டு மகிழ சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் பார்வையாளர்கள் முன்பு தயார் செய்யப்பட்டு கொடுக்கப்படுகிறது.

பொருட்காட்சியின் முகப்பு

மேலும் பாப்கார்ன், பஞ்சு மிட்டாய், டெல்லி அப்பளம், ஜிகர்தண்டா, பேல் பூரி, ஐஸ்கிரீம் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு பாளையங்கோட்டை, ஜங்ஷன், டவுன், மேலப்பாளையம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இது மட்டும் அல்லாமல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

நெல்லையில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொருட்காட்சி மற்றும் எந்திர பறவைகளின் கண்காட்சியை கண்டு ரசிக்க பார்வையாளர்களுக்கு தலா 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆனந்தமாய் கூடி நெல்லையில் உள்ள இந்த பொருட்காட்சியில் பொழுதைக் கழிக்கலாம்.

செய்தியாளர்: சந்தானம், திருநெல்வேலி.

First published:

Tags: Local News, Tirunelveli