முகப்பு /திருநெல்வேலி /

90’s கிட்ஸ் மிட்டாய் கடையில் குவியும் 2K கிட்ஸ்.. நெல்லையில் சுவாரஸ்யம்!

90’s கிட்ஸ் மிட்டாய் கடையில் குவியும் 2K கிட்ஸ்.. நெல்லையில் சுவாரஸ்யம்!

X
90ஸ்

90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை

Thirunelveli News | திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வெரைட்டி வெரைட்டியாய் மிட்டாய், பொம்மைகள் ஆகியவை விற்பனை செய்யப்படும் 90s கிட்ஸ் கடை செயல்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வெரைட்டி வெரைட்டியாய் மிட்டாய், பொம்மைகள் வாங்கி வைத்துள்ள 90 s கிட்ஸ் கடையில் 2k கிட்ஸ் குவிந்து பொருட்களை வாங்கி வருகின்றனர்.

பெட்டிக் கடைகளில் நாலணா எட்டணாக்கு கைநிறைய மிட்டாய்கள் வாங்கி, அதை வாயில் அதக்கிக்கொண்டு பள்ளிக்கு நடந்து சென்ற நாட்கள் எல்லாம் 90ஸ் கிட்ஸ்களால் எப்போதும் மறக்க முடியாது.

மீண்டும் அந்த மிட்டாய்களை சுவைத்துப் பார்த்து விட மாட்டோமா என்று ஏங்குபவர்களுக்காகதிருநெல்வேலியில் திண்பண்டக் கடை ஒன்று துவங்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கடையை கோபாலசாமி கோயில் அருகே நடத்தி வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஜவ்வு மிட்டாய், தேங்காய் மிட்டாய், தேன் மிட்டாய், அப்பளம், மம்மி டாடி பாக்கு என 90களில் சாப்பிட்ட . பல மிட்டாய் வகைகள் மற்றும் பல்வேறு விளையாட்டு பொருட்கள் இந்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

top videos

    இந்த கடைக்கு மிட்டாய் வாங்க வந்திருந்த 2K கிட்ஸ் கூறுகையில், இந்த கடைக்கு தினமும் வருகிறேன். எனக்கு பிடித்த நிறைய மிட்டாய் வகைகள் இங்கே இருக்கின்றன. 90s கிட்ஸ் தான் இதை வாங்க வேண்டும் என்பது கிடையாது, 2k கிட்ஸ் களுக்கும் இது பிடிக்க ஆரம்பித்து விட்டது. நிறைய மிட்டாய் வகைகள் இந்த கடையில் உள்ளன. விலையும் மிக மிக குறைவாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: Local News, Nellai, Tirunelveli