முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் பவர்கட்.. நாளை(மே 16) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு..

நெல்லையில் பவர்கட்.. நாளை(மே 16) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு..

மாதிரி படம்

மாதிரி படம்

Nellai Power Cut : திருநெல்வேலி நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட உப மின் நிலையங்களில் நாளை (16.05.2023) (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (மே 16ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின் பாதையை பராமரிக்க ஒத்துழைப்பு நல்கும் படி பொதுமக்களை திருநெல்வேலி விநியோகம் நகர்ப்புறம் செயற்பொறியாளர் முத்துக்குட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : நாய்களுக்கு இப்படித்தான் உணவு கொடுக்க வேண்டும்.. ஊட்டியில் தனியார் நிறுவனத்தினர் அறிவுறுத்தல்..

மின்தடை ஏற்படும் பகுதிகள்

மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறை சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, மேல கருங்குளம்,முன்னீர்பள்ளம், அரைக்குளம், அன்னை நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதேபோல் தருவை,ஓமநல்லூர், கண்டித்தான் குளம், ஈஸ்வர்யாபுரம், ஆஸ்பத்திரி ரோடு,குலவணிகர்புரம், தெற்குபைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். செல்வகாதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பிஎஸ்என் கல்லூரி, பெருமாள்புரம் ஆகிய பகுதிகள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதேபோல் பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருமால்நகர், திருநகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம்,கொங்கந்தான் பாறை,பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும்தாமரைச் செல்வி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்” என திருநெல்வேலியில் விநியோகம் நகர்புறம் செயற்பொறியாளர் முத்துக்குட்டி தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Tirunelveli